Aran Sei

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் பெயரை மாற்றும் ஒன்றிய அரசு – ராம்கங்கா என்று பெயர் சூட்ட திட்டம்

த்திரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் முதல் தேசிய பூங்காவான ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவின் பெயரை, அந்த பகுதியில் ஓடும் நதியின் பெயரான ராம்கங்கா தேசிய பூங்கா என ஒன்றிய அரசு மாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 3 ஆம் தேதி தேசிய பூங்காவிற்கு வருகை தந்த ஒன்றிய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல்த் துறை அமைச்சர் அஸ்வானி குமார் துபே, பூங்காவின் பெயர் மாற்றப்படும் என்று தெரிவித்தார் என பூங்காவின் இயக்குநர் ராகுல் தெரிவித்துள்ளார்.

‘மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்காதது ஏன்? உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது?’ – சஞ்சய் ராவத்

மலைகள், ஆற்றுப்படுகைகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் அடங்கிய 520 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பாதுகாப்பட்ட பகுதியின் இந்தியாவின் முதல் தேசிய பூங்காவாக 1935 ஆம் ஆண்டு உருவாக்கபட்டது.

அப்போதை ஆங்கிலேய கவர்னர் ஹெய்லி பெயரில் ஹெய்லி தேசியப் பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்த பூங்கா. சுதந்திரத்திற்கு பிறகு அங்கு ஓடிய ஆறு ராம்கங்கா பெயரில் ராம் கங்கா தேசிய பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்ததாக பூங்காவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் – சம்பத்தை படம்பிடித்ததே காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

பின்னர் 1956 ஆம் ஆண்டு புலிகள் ஆர்வலர் எட்வர்ட் ஜேம்ஸ் கார்பெட்டை கௌரவிக்கும் விதமாக ஜிம் கார்பெட் தேசிய பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1973 ஆம் ஆண்டில், இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு திட்டமான ‘பிராஜெக்ட் டைகர்’ திட்டம் இந்த பூங்காவில் இருந்து தொடங்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் முதல் புலிகள் காப்பகமாக இந்தப் பூங்கா மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தப் பூங்காவில் 252 புலிகள் உள்ளன.

Source : ANI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்