Aran Sei

ஜார்கண்டில் மாவோயிஸ்ட் எனக் கருதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் – வனத்திற்குள் சென்றவர் சுடப்பட்ட அவலம்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள குக்கு பிர் வனப்பகுதியில், மாவோயிஸ்ட் என்று எண்ணி பாதுகாப்பு படையினர் சுட்டதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு படை முகாமுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக தொடரும் பழங்குடியினர்கள் போராட்டம் – மாவோயிஸ்ட் தூண்டுதலாவென உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு

இதுகுறித்து தெரிவித்துள்ள லேத்ஹர் பகுதியின், காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் ஆனந்த், நேற்று காலை இளைஞர்கள் வனத்திற்குள் வேட்டையாட சென்றபோது, அங்கு மாவோயிஸ்ட்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இறந்தவர் அந்த பகுதியிலுள்ள பிரி கிராமத்தை சேர்ந்தவர் என்றும், மேலும் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரசாந்த் ஆனந்த் கூறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட்கள் பிடியில் இருந்த சி.ஆர்.பி.எஃப் அதிகாரி – ஐந்து நாட்களுக்குப் பிறகு விடுதலை

முதலில் இந்த செய்தி சி.ஆர்.பி.எப் மற்றும் மாநில காவல்துறை நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர், இறந்தவர் மாவோயிஸ்ட் இல்லை அந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த இளைஞர்களுடன் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பற்றவர்கள் என்று தெரியவந்ததகவும், அந்த கிராமமக்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் ஆனந்த் கூறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்