ஜார்க்கண்டில், இந்தியாவின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய முதல்வர் ஹேமந்த் சோரேன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரை அரசு நியமிக்க இருப்பதாக கூறிய அவர், இந்த ஆண்டு நியமனங்களின் ஆண்டாக இருக்கும் என கூறியுள்ளார்.
தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்கும் வகையில், ஒரு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஹேமந்த் சோரேன் கூறியுள்ளதாக இந்தியா.காம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு புதிய ஓய்வுதிய திட்டத்தை ஜார்க்கண்ட் அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக கூறியுள்ள அவர், இந்த திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் இருக்கும் முதியவர்களுக்கு மாதம் ரூ 1000 வழங்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
ஹரியானா – தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு – உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க சட்டம்
தோதி – சாரி (வேஷ்டி மற்றும் சேலை) எனும் திட்டத்தின் மூலம் ஜார்க்கண்டில் உள்ள 57 லட்சம் ஏழை மக்களுக்கு, வேஷ்டி மற்றும் சேலை மானிய விலையில் (ரூ.10) வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை தனது அரசாங்கம் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது என்றும் அதன் கீழ் ரூ.50,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.