Aran Sei

ஜார்கண்ட் ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் – ஒருவர் உயிரிழப்பு; இணைய சேவை முடக்கம்

ராமநவமி ஊர்வலத்தின் போது நடந்த வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோஹர்டகா மாவட்டத்தின் சில பகுதிகளில் இணைய சேவைகளுக்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (ஏப்ரல் 10) நடந்த வன்முறையின் போது படுகாயமடைந்த ஒருவர் நேற்று (ஏப்ரல் 11) உயிரிழந்துள்ளார்.

லோஹர்டகா மாவட்ட துணை ஆணையர் வாக்மரே பிரசாத் கிருஷ்ணா கலவரத்தில் நிகழ்ந்த உயிரிழப்பை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், உயிரிழப்பு குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துள்ளார்.

ஜார்க்கண்ட்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – 8 பேர் காயம்

“இந்த உயிரிழப்பு வகுப்புவாத வன்முறையுடன் தொடர்புடையதா என்பதை ஆராய்ந்து வருகிறோம். அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, இணைய சேவைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லோஹர்டகா மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

அம்மாவட்டத்தின் போடா கிராமத்தைச் சேர்ந்த அமன் அன்சாரிதான் உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமன் அன்சாரியின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது குடும்பத்தினர், “நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) மாலை அமன் தனது மருமகன் முகமது வாசிமுடன் லோஹர்டகாவிலிருந்து எங்களது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு ஆக்ரோஷமான கூட்டம் அவர்களைத் தாக்கி இருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அமன் அன்சாரி உயிரிழந்தார். முகமது வாசிம் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

குஜராத்: ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

லோஹர்டகாவின் ஹிராஹி கிராமத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) நடந்த ராமநவமி ஊர்வலத்தின்போது கல் வீச்சு சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களில் நான்கு பேர் காயமடைந்தனர்.

Source: New Indian Express

தமிழன்னையை கறுப்பாக வரைந்ததற்கு வலதுசாரிகள் எதிர்ப்பு. தமிழன்னை கறுப்பாக இருக்கலாமா? மக்கள் கருத்து

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்