Aran Sei

நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல், பாதிப்பு ஏற்படும் போது யாரும் கண்டுகொள்வதில்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கண்டனம்

கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல், தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது யாரும் கண்டுக் கொள்வதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபயிற்சி சென்ற நீதிபதியின் மீது கார் ஏற்றிக் கொள்ளப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

”நீதிபதிகள் புகார் அளித்தால் காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகள் உதவ மறுக்கின்றனர்.  சிபிஐ அவர்களது அணுகுமுறையின் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.” என ரமணா கூறினார்.

நீதிபதிகளை பாதுகாப்பது தொடர்பாக நிலுவையில் உள்ள மனுகுறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என ஒன்றிய அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

உயர்மட்ட வழக்குகளில் சாதகமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படாதபோது நீதித்துறையை இழிவுபடுத்தும் போக்கு உள்ளது குறித்து கவலை தெரிவித்த நீதிபதி ரமணா, “வன்முறையாளர்கள் தொடர்பான உயர்மட்ட வழக்குகளில், வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் நீதிபதிகளுக்குத் தவறான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.” என குற்றம்சாட்டினார்.

”சிபிஐ எதையும் செய்யவில்லை. அவர்களின் நடைமுறையில் சில மாற்றங்களை எதிர்பார்த்தோம். ஆனால் இந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு சொல்வதற்கு மன்னிக்கவும், ஆனால் இது தான் நிலைமை.” என ரமணா தெரிவித்தார்.

அச்சுறுத்தல்கள்குறித்து நீதிபதிகள் சிபிஐ மற்றும் உளவுத்துறையிடம் புகார் தெரிவிக்கும்போது, அவர்கள் பதிலளிப்பதில்லை என நீதிபதி ரமணா குறிப்பிட்டார்.

”விசாரணை முகமைகள் உதவவில்லை. நான் இந்த அறிக்கையைப் பொறுப்புணர்வுடன் வெளியிடுகிறேன். நான் இன்னும் அதிகமாக பேசவில்லை. ஏதாவது செய்ய வேண்டும்” என நீதிபதி ரமணா கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 49 வயதான மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், ஜூலை 28 ஆம் தேதி காலை நடைபயிற்சி சென்றபோது ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

source:NDTV

தொடர்புடைய செய்திகள்:

’மருத்துவத்துறையின் பிரச்சனைகளுக்கு ஒன்றிய அரசு கவனம் செலுத்தவில்லை’ – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

பாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகக் கோரிக்கை

பெகசிஸ் தொடர்பாக பதிலளிக்க மாநிலங்களவையில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி – அனுமதியளிக்க கூடாது என அரசு கடிதம்

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்