Aran Sei

ஜார்கண்ட்: நீதிபதி மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கு – வாட்சப் தலைமை நிர்வாகியை வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Credit: The Hindu

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி உத்தம் ஆனந்த் மீது  கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் எதிர்மனுதாரராக வாட்சப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியைச் சேர்க்குமாறு மத்திய புலனாய்வு அமைப்பினருக்கு (சிபிஐ) ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜுலை 28, 2021 தேதி நீதிபதி உத்தம் ஆனந்த்  நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆட்டோ ரிக்‌ஷா ஏற்றிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பொது நல மனுவை ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் மற்றும் நீதிபதி சுஜித் நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வாட்சப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தவிட்டுள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வாட்சப் உரையாடல்களை, பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை காரணம் காட்டி  வாட்சப் நிறுவனம் தர மறுத்துவிட்டதாக நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்துவைத்துள்ள நீதிபதிகள், வாட்சப் நிர்வாகி ஆஜராகும் வகையில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்பட்டிருப்பதாக  தெரிவித்துள்ளனர்.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்