Aran Sei

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க விவசாயப் பள்ளிகள் தொடங்கப்படும் – ஜார்கண்ட் அரசு

விவசாயத்தில் உள்ள விஞ்ஞான முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் நூறு கிரிஷக் பத்ஷாலாக்களை (விவசாய பள்ளிகள்) உருவாக்க உள்ளோம் என்று ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதுடன், விவசாய உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பயிற்றுவிற்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கூட்டுறவுத் துறை தொடர்பான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும் இப்பள்ளிகள் ஏற்படுத்தும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பிர்சா விகாஸ் யோஜனா திட்டத்தின் முதற்கட்டமாக பதினேழு விவசாய பள்ளிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்று நூறு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

‘பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது’- மகாராஷ்ட்ர முதலமைச்சர்

“விவசாயம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அப்பள்ளிகளில் ஒன்றாக இணைக்கப்படும். அப்பள்ளிகளில் விவசாயிகள் அறிவியல்ரீதியிலான முறையில் கற்க வருவார்கள். ஒவ்வொரு பள்ளியும் 3 முதல் 5 கிராமங்களுடன் இணைக்கப்படும்” என்று விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் கூட்டுறவு செயலாளர் அபுபக்கர் சித்திக் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட்டில் ஹேமண்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்