Aran Sei

லக்கிம்பூர் கெரி வன்முறை: ’பாஜகவின் ஆதிக்க கொடுஞ்செயலுக்கான அப்பட்டமான சாட்சி’ – ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

க்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக ஒன்றிய மற்றும் உத்தரபிரதேச பாஜக அரசிற்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும்பான்மையுடைய ஒரு ஆதிக்க சக்தியின் கொடுஞ்செயலுக்கான அப்பட்டமான சாட்சி என்று பாஜகவினரை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று முன் தினம் (அக்டோபர் 3), உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கினர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

‘லக்கிம்பூர் கெரி வன்முறை’ – ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை கைது செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வன்முறை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஹேமந்த் சோரன், “லக்கிம்பூரில் நடந்த கொடூர சம்பவம் மனிதகுலத்தின்மீது படிந்த கறை. உபி மற்றும் ஒன்றியத்தில் ஆளும் கட்சியினரின் பெரும்பான்மையுடைய ஆதிக்கத்தின் கொடுஞ்செயலுக்கான அப்பட்டமான சாட்சி. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை எதிர்கட்சித் தலைவர்கள் சந்திப்பதை தடுத்து நிறுத்தும் இந்த ஜனநாயகமற்ற செயற்பாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூர் கேரி வன்முறை – விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்திக்கு தடை விதித்த காவல்துறை

நேற்று (அக்டோபர் 4), பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் துணை முதலமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா ஆகியோர் லக்கிம்பூர் கேரிக்கு செல்ல உத்தரப்பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சீதாபூரில் தடுத்து வைக்கப்பட்டனர். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக காங்கி்ரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்