Aran Sei

‘வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.25 குறைப்பு’- ஜார்க்கண்ட் முதலமைச்சர்

றுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 மாணியம் வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

நேற்று(டிசம்பர் 29), ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியின் போது பேசியுள்ள அவர், “இத்திட்டத்தின் பயனாளிகள் (இரு சக்கர வாகன உரிமையாளர்கள்) ஒவ்வொரு மாதமும் 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 25/லிட்டர் தங்கள் வங்கிக் கணக்கில் திரும்பப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும்” என்று கூறியுள்ளார்.

“பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த எரிபொருள் விலையுயர்வால், இரு சக்கர வாகனம் வைத்திருந்தாலும் அவர்களால் சுதந்திரமாக போக்குவரத்தில் ஈடுபட முடியவில்லை. எரிபொருள் விலையேற்றத்தால் தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அதன் பொருட்டே, வறுமை கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.25 மாணியமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்