Aran Sei

ஹரியானாவை தொடர்ந்து ஜார்க்கண்டில் தனியார்துறையில் இடஒதுக்கீடு – தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தகவல்

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் - Image Credit : thewire.in

னியார் துறைகளில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவிற்கு, ஜார்க்கண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தனியார் துறையில், 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறும் பணியிடங்களில், இந்த இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த சட்டம் குறித்த தகவலை, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கவுள்ளார்.

ஏற்கனவே, ஹரியானா மாநிலத்தில், தனியார் துறையில், அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில், திமுகவின் தேர்தல் அறிக்கையில், தனியார்துறையில் தமிழர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்