Aran Sei

‘மசூதி ஒலிபெருக்கிகளால் 75 ஆண்டுகளாக இல்லாத பிரச்சனை இப்போது மட்டும் ஏன்?’ – எச்.டி.குமாரசாமி கேள்வி

சூதிகளில் பொறுத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டுமென இந்து அமைப்புகள் கோரி வரும் நிலையில், பாஜகவும் வலதுசாரி அமைப்புகளும் சமூகத்தை சீரழித்து வருகின்றன என்று கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நேற்று (ஏப்ரல் 4), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள எச்.டி.குமாரசாமி, “75 ஆண்டுகளாக அந்த ஒலிபெருக்கிகளால் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது மட்டும் எப்படி பிரச்சினை வருகிறது? மக்களைக் காக்கவே பாஜகவுக்கு எதிராக நிற்கிறேன். மாறாக, யாரையும் மகிழ்விப்பதற்காக அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பாஜகவும் வலதுசாரி அமைப்புகளும் சமூகத்தை சீரழித்து வருகின்றன. தெருக்களுக்குத் தீ வைக்கிறார்கள். இத்தனை நடந்துக்கொண்டிருக்கையில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஆபத்தான சக்திகளை நம்மை சுற்றி வளர அனுமதித்துள்ளீர்கள். உங்கள் பலம் இப்போது எங்கே போனது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மசூதிக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கியை அகற்றாவிட்டால், மசூதிக்கு முன் ஹனுமான் சாலிசாவை பாடுவோம் –  மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே

“மசூதிகளுக்கு வெளியே ஒலிப்பெருக்கிகள் எதற்கு? மதம் உருவான போது, ஒலிப்பெருக்கி இருந்ததா? ஒலிப்பெருக்கிகளை அரசாங்கம் அகற்ற வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் ஒவ்வொரு மசூதியின் முன்பாகவும் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் ஹனுமான் சாலிசா பாடுவார்கள்”என்று அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அண்மையில் தெரிவித்திருந்தார். இதே போல கர்நாடகாவில் இயங்கும் ஸ்ரீ ராமசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும் மசூதிக்கு வெளியில் ஒலிப்பெருக்கிகளை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

Source: New Indian Express

“இலங்கையின் வீழ்ச்சிக்கு இனவாதம்தான் காரணம்”

கூடுதல் தகவலுக்கு க்ளிக் செய்யவும்…

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்