ஒருவர் தங்களுடைய கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலை இந்நாட்டில் நிலவுகிறது என்றும் இது அறிவிக்கப்படாத அவசரநிலை காலகட்டமே தவிர வேறில்லை என்றும் கர்நாடக முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.குமாரசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து, எச்.டி.குமாரசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் ட்வீட்டுக்கள் பதிந்துள்ளார்.
அதில், “அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்காக நன்கொடைகளை வசூலிப்பவர்கள், பணம் கொடுத்தவர்களின் வீடுகளையும், பணம் கொடுக்காதவர்களின் வீடுகளையும் தனித்தனியாக அடையாளங்களிட்டு வருவதாகத் தெரிகிறது. இது ஜெர்மனியில் லட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்ட, ஹிட்லரின் ஆட்சியின் போது நாஜிக்கள் செய்ததைப் போன்றுள்ளது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
It appears that those collecting donations for the construction of Ram Mandir have been separately marking the houses of those who paid money and those who did not. This is similar to what Nazis did in Germany during the regime of Hitler when lakhs of people lost their lives..
— H D Kumaraswamy (@hd_kumaraswamy) February 15, 2021
“இந்தியாவில் காணப்படுகின்ற இந்த போக்கானது, நம்மை இறுதியாக எங்கு அழைத்துச் செல்லும் என்பது எனக்குத் தெரியாது. ஜெர்மனியில் நாஜி கட்சி தோற்றுவிக்கப்பட்ட அதே காலகட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்ஸும் தோற்றுவிக்கப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். நாஜிக்கள் அமல்படுத்திய கொள்கைகளை ஆர்எஸ்எஸ்ஸும் இங்கே செயலாக்க முயற்சித்தால் என்ன நடக்கும் என்ற கவலை எனக்கு உள்ளது.” என்று எச்.டி.குமாரசாமி கூறிடியுள்ளார்.
‘எமர்ஜென்சியை நோக்கி செல்கிறோம்’ – திஷா ரவிக்கு ஆதரவாக விவசாயிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள்
மேலும், “நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் இப்போது பறிக்கப்படுகின்றன . ஒருவர் தங்களுடைய கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலை இந்நாட்டில் நிலவுகிறது. இது அறிவிக்கப்படாத அவசரநிலை காலகட்டமே தவிர வேறில்லை. யாரும் தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“எதிர்காலத்தில் அரசின் கருத்துக்களை ஊடகங்களும் ஆதரிக்க தொடங்கினால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், பொது மக்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்று யூகிக்கவே கடினமாக உள்ளது. நம் நாட்டில் எதுவும் நடக்கக்கூடும் என்பதை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் தெளிவாக்குகின்றன” என்று எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.