Aran Sei

’ஜெய்பீம்’ படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகம்’ – கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர்

ஜெய்பீம்’ படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகம் அளிக்கிறது என்று கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.

தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய படம் ’ஜெய் பீம்’ இதனை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. கடந்த 2 ஆம் தேதி வெளியான இப்படத்தில் மணிகண்டன், லிஜோமோல், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது குறவர் இன மக்களுக்காக வாதாடிய உண்மைச் சம்பவத்தையே ‘ஜெய் பீம்’ படமாக எடுத்திருக்கிறார்கள்.

‘ஜெய்பீம்’ படத்தின் வெற்றி எங்கள் இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – கே.பாலகிருஷ்ணன்

தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைமில் ‘ஜெய் பீம்’ வெளியாகி இந்தியா முழுக்க பேசுபொருளாகி இருக்கிறது.  இந்நிலையில், கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் ‘ஜெய்பீம்’ படத்தைப் பார்த்துப் பாராட்டியிருக்கிறார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்

’ஜெய்பீம்’ படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகம் அளிக்கிறது. சமூகத்தின் வன்முறை மற்றும் சமூக பாகுபாடு குறித்த கடினமான உண்மைகளின் சித்தரிப்பைக் காட்டுகிறது. பிரமாதமான எடுத்துள்ளார்கள். முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என்று கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்