ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
https://www.aransei.com/news/mullaperiyaru-affair-o-panneer-selvam-insists-on-convening-an-all-party-hall/
ட்விட்டரில் விஜய் என்பவர் எழுதிய பதிவில், “திரௌபதி படத்துல ஒரு கேரக்டர் அச்சு அசலா திருமாவளவன் மாதிரிதான் காட்டி எடுத்து வெச்சிருப்பான். @mohandreamer அது பத்தி கேட்டப்போ, “அந்த படத்தை நான் பார்க்கல. பார்க்க எனக்கு நேரமும் இல்ல. அது பத்தி கருத்து சொல்ல ஒன்னும் இல்ல”னு சொல்லி முடிச்சிட்டார். அதை விசிக காரங்க பெருசு பண்ணியிருந்தாங்கன்னா பெரிய சட்டம் ஒழுங்கு, சாதிக்கலவரம் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். திருமா தன் கட்சியினரை அதை எளிதாக கடந்து போக சொல்லிட்டார். அதுதான் தலைமை பண்பு. அன்புமணி அப்பாவி வன்னியர் இளைஞர்களை அரசியல் சுயலாபத்துக்காக தூண்டி விடுகிறார். பாவம் அவர்கள்” என்று எழுதியிருந்தார்.
கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. pic.twitter.com/W3mrldx5VF
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 13, 2021
இப்பதிவை பகிர்ந்த திருமாவளவன், “கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.