Aran Sei

ஜெய்பீம் 2.0: டாக்டர் அம்பேத்கர் நூல்களை 50 தொகுதிகளாக வெளியிடும் விசிக – திருமாவளவன் தகவல்

credits : indian express

ஜெய்பீம் 2.0 எனும் பதிப்பகத்தின் வழியே டாக்டர் அம்பேத்கரின் நூல்கள் 50 தொகுதிகளாக வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று இணைய வழியில் உரையாற்றிய அவர், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஜெய்பீம் 2.0 எனும் பதிப்பகத்தை உருவாக்கி டாக்டர்  அம்பேத்கரின் நூல்கள் 50 தொகுதிகளாக வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் அம்பேத்கரின் நூல்களை 17 தொகுதிகளாக தமிழில் வெளியிட்டு வந்தது. தற்போது நூல்கள் அச்சிடுவதை நிறுத்திக்கொண்டது என்று தெரிவித்த திருமாவளவன், அம்பேத்கரின் நூல்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்லப்படும். இதற்கு எழுத்தாளர் கௌதம சன்ன பொறுப்பாளராக இருப்பார். முன்வெளியீட்டுத் திட்டம் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்  என்றும் கூறியுள்ளார்.

அம்பேத்கரின் எழுத்துக்கள் சனதானத்திற்கு எதிரானவை. அவரை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் வழியே புதிய இந்தியாவை, சமத்துவ இந்தியாவை, சாதிகளற்ற இந்தியாவை, ஏற்றத்தாழ்வற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்