Aran Sei

வேதா நிலையம்: மறைந்த முதல்வர்கள் அனைவரின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது – சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

credits : the indian express

னைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோல நினைவில்லங்கள் அமைக்கப் போகிறீர்கள் எனத் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வழிவகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ஜெயலலிதா நினைவில்லத்தை பராமரிக்க அறக்கட்டளை அமைத்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் தெரிவித்தார்.

எத்தனை முறை சொல்வது – “திருமணத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை” – அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில், சமுதாயத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் வீடுகள், நினைவு இல்லங்களாகப் பராமரிக்கப்படுகின்றன எனவும்,  அந்தத் தலைவர்கள் வாழ்ந்த வீடுகளைக் கையகப்படுத்தி நினைவு இல்லங்கள் அமைப்பது  புதிதல்ல எனவும் தெரிவித்தார்.

கங்காசாகர் மேளா – ‘மத நம்பிக்கைகளை விட உயிர் தான் முக்கியம்’ : கொல்கத்தா உயர் நீதிமன்றம்

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டம் இயற்றியுள்ளதா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

18 வயதைக் கடந்தவர்கள் ஒன்றாக வாழலாம் – பஞ்சாப் உயர் நீதிமன்றம்

மேலும், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோல நினைவில்லங்கள் அமைக்கப் போகிறீர்கள் எனவும்,  அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலுக்குள் தொழுதவர் மீது வழக்கு : நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கம் இல்லை – உயர் நீதிமன்றம் பிணை

இது தொடர்ந்தால்,  அமைச்சர்களின் வீடுகளும் கூட  நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும்  பல நீதிபதிகளும் நீதித்துறைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ள நிலையில் அவர்களுக்குச் சிலை அமைக்க நீதிமன்ற வளாகத்தில் இடமில்லை எனவும், கூறியுள்ள தலைலமை  நீதிபதி, தமிழக அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் – தனி மனித உரிமைக்கு எதிராகச் செயல்படுகிறது – அலகாபாத் உயர் நீதிமன்றம்

பின்னர், தீபக்கின் மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்