Aran Sei

கைகளால் மலம் அள்ளும் முறை ஒரு தேசிய அவமானம் – மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க ஜெயாபச்சன் வலியுறுத்தல்

கைகளால் மலம் அள்ளும் முறை இன்னும் நடைமுறையில் இருப்பது நம் நாட்டிற்கே அவமானம் என்று சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பிரச்சினையை உடனடியாக மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

துப்புரவு பணியில் மனிதர்களை ஈடுபடுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – பேராசிரியர் லக்ஷ்மணன்

இன்று (மார்ச் 23), இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசியுள்ள ஜெயா பச்சன்,  “நாம் ஏன் இன்னும் கைகளால் மலம் அள்ளும் முறையை ஒழிக்கவில்லை. பிற துறைகளில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள் குறித்து பேசும் நாம்மால், அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு சாதனங்களை வழங்க முடியவில்லை.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்கள் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைபடுத்துகிறீர்கள் என்றும் இதுவும் அத்திட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும் குறிப்பிட்டுள்ளவர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் ரயில்வே துறையின் கீழ் பணிபுரியும் கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மீது உடனடியாக கவனம் செலுத்தி, அவர்களின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

389 மலக்குழி மரணங்கள்: நம்முடைய மனசாட்சி நம்மை கொல்லாதிருக்க நடவடிக்கை எடுப்போம் – ராகுல் காந்தி

மேலும், அப்பணியாளர்களின் கண்ணியத்திற்கும் மறுவாழ்விற்கும் வழிவகை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய ஜெயா பச்சன், மலமல்லும் தொழிலாளர்கள் பணிபுரிகையில் உபயோகிக்க வேண்டிய பாதுகாப்பு சாதனங்களை வழங்க மறுக்கும் ஒப்பந்தக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்