Aran Sei

‘தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா’ – தமிழகத்தை அவமதிக்கும் செயல் என ஜவாஹிருல்லா கண்டனம்

மிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தை அவமதிக்கும் செயல் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்காமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருகின்றார்.

இச்சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிடத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற குழுத் தலைவர் திரு. டி. ஆர். பாலு அவர்கள் தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளனர். தலைநகர் டெல்லியிலிருந்த நிலையில் ஒன்பது நாட்கள் கடந்த பிறகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்திருப்பதின் மூலம் ஒட்டு மொத்தத் தமிழக மக்களையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டுமெனவும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காக்க வைத்து அவமதித்துள்ள அமித்சா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்