Aran Sei

தாலிபான்களோடு ஆர்எஸ்எஸ்சை ஒப்பிட்ட கவிஞர் ஜாவேத் அக்தர் – சிவசேனா கண்டனம்

விஞர் ஜாவேத்  அக்தர் ஆர்எஸ்எஸ் அமைப்போடு, தாலிபான்களை   ஒப்பிட்டுப் பேசியது முழுமையாகத் தவறானது என  சிவசேனா கட்சி கண்டனம்  தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3 அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய ஜாவேத்  அக்தர் , “ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை ஆதரிக்கும் மக்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக, தலிபான்கள் கண்டிக்கத்தக்கவர்கள் . காட்டுமிராண்டிகள். ஆனால் நீங்கள் ஆதரிப்பவர்கள், அவர்களிடமிருந்து [தலிபான்கள்] எவ்வகையில் வேறுபட்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் சின் பெயரைக் குறிப்பிடமல், “தாலிபான்கள் இஸ்லாமிய நாட்டை அமைக்க விரும்புகின்றனர்.  இவர்கள் இந்து ராஷ்ட்ரம் அமைக்க விரும்புகின்றனர்” என்றும் ஜாவேத்  அக்தர்  கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள சிவ சேனா பத்திரிகையின் அதிகாரப்பூர்வப் பத்திரிகையான சாமனா,  “ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை எவ்வாறு தலிபான் தீவிரவாதிகள் மனநிலையோடு ஜாவித் அக்தர் ஒப்பிட்டுப் பேச முடியும்? இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கருத்தை ஏற்கவும் மாட்டோம்”. என்று தெரிவித்துள்ளது.

மேலும், “ஜாவேத்  அக்தர் மதச்சார்பற்றவர். பலமுறை  அடிப்படைவாதக் கருத்துகளை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் சையும் , தலிபான்களையும் ஒப்பிட்டதை ஏற்க முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

source:டைம்ஸ் ஆப் இந்தியா

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்