Aran Sei

‘ஜனநாயகம் என்பது உறைந்து கிடப்பதல்ல; இயங்கிக்கொண்டே இருப்பது’ – கவிஞர் ஜாவேத் அக்தர்

பாடலாசிரியரும் எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் மற்றும் நடிகர் ஷபானா ஆஸ்மி ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து ஒன்றிய அரசில் மாற்றம் தேவை என்றும் வங்காளம் எப்போதும் புரட்சிகர இயக்கங்களை வழிநடத்தும் என்றும் கூறியுள்ளார்.

கலைஞர்களுக்கான ராயல்டிக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை ஆதரித்ததற்காக நன்றி தெரிவிக்க அவர்கள் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளனர்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், “வரலாற்று ரீதியாக, வங்காளம் எப்போதுமே புரட்சிகர இயக்கங்களுடன் முன் நிற்கிறது. அதனால்தான் மாநிலத்தில் உள்ள கலைஞர்களும் அறிவுஜீவிகளும் பானர்ஜியுடன் நின்றார்கள். ஒன்றிய அரசில் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

“நாட்டில் இப்போது பதட்டமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. வகுப்புவாத பிரச்சினை உள்ளது. பலர் பெருங்கோபத்துடன் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். வன்முறை சம்பவங்கள் பெறுகிவிட்டன.  டெல்லியில் நடந்த வகுப்புவாத கலவரங்கள் நமக்கு அவமானத்தைத் தருகின்றன. இவை இனி நடக்கக் கூடாது.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பானர்ஜி வழிநடத்த வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜாவேத் அக்தர், “அவருடனான சந்திப்பின் போது, ​​ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்ற லட்சியம் தனக்கு இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை. இருப்பினும், அவர் மாற்றத்தை நம்புகிறார். அவர் முன்பு வங்காளத்துக்காக போராடினார். இப்போது அவர் இந்தியாவுக்காக போராட விரும்புகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

“இதில் முக்கியமான கேள்வி கூட்டணியை யார் வழிநடத்துவார்கள் என்பதல்ல. நாம் எந்த வகையான இந்தியாவை விரும்புகிறோம் என்பதே நம்முள் இருக்கும் கேள்வி? எவ்வகையான பண்பாடு, சூழல், சுதந்திரம்,  ஜனநாயகம் போன்றவற்றை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதுதான் முக்கியம். நமக்கென்று ஒரு ஜனநாயகம் உள்ளது என்பதில் நாம் பெருமைப்படுகிறோம். ஆனால், அது சிறப்பாக இயங்க நாம் பாடுபட வேண்டும். ஜனநாயகம் என்பது உறைந்து கிடப்பதல்ல. இயங்கிக்கொண்டே இருப்பது.” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்