Aran Sei

பாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, பாஜகவை சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி மீது விசாரணை நடத்தக் கோரி புகார் அளித்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹல்லி, தன் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக மறுத்துள்ளார்.

இளம்பெண் ஒருவருக்கு வேலைவாங்கித் தருவதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடக மாநில அமைச்சர் ஜர்கிஹோலி மீது புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி, ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.

பாஜக அரசை எதிர்த்து கருத்து கூறியதால் குறிவைக்கப்படும் அனுராக் கஷ்யப், தாப்சி பன்னு – எதிர்க்கட்சிகள்

இது தொடர்பாக, சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹல்லி என்பவர், அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மீது, பெங்களூரு கபன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், புகாரளித்த தினேஷ் கலாஹல்லியிடமும், வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் பெண்ணிடமும் இந்த வழக்கைப் குறித்து கூடுதல் விவரங்களை பெற விசாரணைக்கு ஆஜராகும் படி அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கனகாபுராவில் வசித்து வரும் தினேஷ் கலாஹல்லி, புகார் அளித்தது முதல் தொடர்ந்து அவரது தொலைபேசிக்கு மிரட்டல்கள் வருவதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டைச் சுற்றி நோட்டமிடுவதை தான் கவனித்ததாகவும், அதனால் தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரி ராம்நகரம் காவல்நிலையத்தை அணுகியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ – மாயாவதி விமர்சனம்

அவரது வீட்டில், காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று தினேஷ் கலாஹல்லி கூறியுள்ளார் என்றும், இவற்றை சுட்டிக்காட்டி காவல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், அதில் மார்ச் 9 ஆம் தேதி காவல்துறை முன் ஆஜராகிறேன் என்று உறுதியளித்துள்ளார் என்றும் தி இந்து குறிப்பிட்டுள்ளது.

தினேஷ் கலாஹல்லியை நாடி, உதவி கோரிய அப்பெண்ணையும் அவரது குடும்பத்தையும் தேடிக்கொண்டிருப்பதாகவும் அப்பெண்ணின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியமான ஒன்று என்றும் கப்பன் பார்க் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்