Aran Sei

’பாஜக அமைச்சருக்கு எதிராகப் புகார் அளிக்க உள்ளேன்’ – பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் காணொளி வெளியீடு

வேலை வாங்கிதருவதாகக் கூறி பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜார்கி ஹோலி மீது புகார் அளிக்கவுள்ளதாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அரசுவேலை பெற்று தருவதாகச் சொல்லிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியின் காணொளி தொலைக்காட்சிகளில் வெளியானதை தொடர்ந்து அவர் பதவி விலகி இருந்தார்.

‘பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு’ – பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

இதுகுறித்து விசாரிக்க அம்மாநில அரசு, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருந்தது, அந்தக் குழு அமைச்சருக்கு சார்பாக செயல்படுகிறது என்று பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து ஏற்கனவே இரண்டு காணொளிகளை வெளியிட்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், தற்போது வெளியிட்டுள்ள மூன்றாவது காணொளியில் அமைச்சர் மீது புகார் அளிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு உரிய பாதுகாப்பளிக்க வேண்டும் – பாஜக அமைச்சரால் பாதிக்கப்பட்ட பெண் காணொளி வெளியீடு

பாதிக்கப்பட்ட பெண் அந்தக் காணொளியில் ” எனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அச்சம் கொண்டிருந்தேன். ஆனால் எனக்களிக்கப்பட்ட இந்த ஆதரவினால் அமைச்சரின் மீது புகார் அளிக்க உள்ளேன் ” என்று கூறியதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை – கர்நாடக காவல் துறை

இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் புகார் அளித்தால், அப்புகார் இந்த வழக்கின் போக்கையே மாற்றக்கூடும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்