Aran Sei

‘ஜந்தர் மந்தரில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சு’ – நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு பிணை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம்

டந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரீத் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரரின் மனு ஏற்கப்பட்டு அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது நீதிபதி முக்தா குப்தா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு பிரிவினருக்கு இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் மற்றும் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இளைஞர்களைத் தூண்டிவிட்டதற்காக, ஆகஸ்ட் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பிரீத் சிங்கிற்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டிருந்தது.

காற்றுமாசினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – 16 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்த டபில்யூ.ஹச்.ஒ

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ’பாரத் ஜோலோ அந்தோலன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக, அவர்களை வெறுப்பூட்டும் வகையில் பேசினர். இந்தக் காணொளிகள் சமூக வலைதளங்களில் பலமுறை பகிரப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மகாராஷ்டிராவில் 8 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி – 24 பேரைக் கைது செய்த காவல்துறையினர்

முன்னதாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி ப்ரீத் சிங்கின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி அணில் அண்டில், ”அமைதியான முறையில் ஒன்று கூடுதல், சுதந்திரமாக கருத்தை பதிவு செய்தல் ஆகிய உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப்பு உத்திரவாதம் அளித்துள்ளது. ஆனால், அது முழுமையானது அல்ல, உள்ளார்ந்த நியாயமான கட்டுப்பாடுகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

ப்ரீத் சிங்கை ஜாமீனில் வெளியிட டெல்லி காவல்துறை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. குறிப்பிடத்தக்கது.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்