டெல்லி ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இந்து ரக்சா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி நேற்றைய தினம் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 8 அன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய் ஒருங்கிணைத்தக் கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கங்கள் எழுப்பபட்டுள்ளன.
இதுவரை இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்பது பேரைக் காவல்துறை கைது செய்திருந்தது.
பிங்கி சவுத்திரியின் பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்ததில் இருந்து அவர் தலைமறைவாக இருந்தார். அதனால் பிங்கி சவுத்திரியைக் கைது செய்ய காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.
இந்நிலையில், இந்து ரக்சா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி மந்திர் மார்க் காவல் நிலையத்தில் நேற்று மதியம் 2.30 மணியளவில் சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது.
WATCH: #PinkiChaudhary the man who’s accused in the Jantar Mantar hate-speech arrives at the police station to “surrender” before the Delhi Police. pic.twitter.com/krwITZBTkN
— Prashant Kumar (@scribe_prashant) August 31, 2021
பிங்கி சவுத்திரி காவல்துறையிடம் சரணடைய சென்ற போது, இந்துத்துவ அமைப்பினர் அவரை தோளில் தூக்கிக் கொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘பிங்கி சவுத்ரி ஜிந்தாபாத்’ என்று முழக்கம் எழுப்பிய காணோளியும் வெளியாகியுள்ளது.
source:தி வயர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.