Aran Sei

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் – ஒன்பது பேரை கைது செய்து டெல்லி காவல்துறை நடவடிக்கை

ந்தர் மந்தரில் நடைபெற்றக் கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மேலும்  ஒருவரை டெல்லி காவல்துறைக் கைது செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 8  அன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில்  பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய்  ஒருங்கிணைத்தக் கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கங்கள் எழுப்பபட்டுள்ளன.

இதில் சம்பந்தப்பட்ட 8 பேரை ஏற்கனவே டெல்லி காவல்துறை கைது செய்துள்ள நிலையில் உத்தம் சிங் என்று மேலும் ஒரு நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்த அஷ்வினி உபாத்யாய் கைதுசெய்யப்பட்டு பின் பிணையில் வெளியானது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உத்தம் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதில் தொடர்புடைய பிங்கி சவுத்திரியை காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. பிங்கி சவுத்திரியின் பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்ததில் இருந்து அவர் தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர்  உத்தம் சிங் அவரது நண்பரைச்  சந்திக்க வந்த போது கைது செய்யப்பட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட பிறரைக் குறித்து விசாரித்து வருவதாகவும்  கூறியுள்ளனர்.

source: the indian express

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்