புதியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் 5 அலுவல்மொழிகளோடு சமஸ்கிருதத்தையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக அம்மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
கதுவா மாவட்டத்தின் பசோலி பகுதியில் நடந்த சூடாமணி சமஸ்கிருத சன்ஸ்தான் புதியக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், “சமஸ்கிருத மொழியின் பெருமைக்குப் புத்துயிர் அளிப்பது நமது கூட்டுப் பொறுப்பு. நமது நாகரிக மதிப்புகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதும் முக்கியமானது” என்றும் ஆளுநர் மனோஜ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, “நவீனகால தேவைகளுக்கு ஏற்றவாறு சமஸ்கிருதம் பள்ளிகளில் கற்றுத் தரப்பட முயற்சி மேற்கொள்ளப்பாட வேண்டும். சமஸ்கிருத வேதங்களில் உள்ள ஞானம் சமகாலத்தலைமுறைக்கு எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவும்” என்றும் அவர் அந்த அடிக்கல் நாடு விழாவில் கூறியுள்ளார்.
மேலும், “இந்த நாட்டிலேயே சமஸ்கிருதம் மட்டும் தான், வெவ்வேறு பகுதி மக்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், ஆசிரியருக்கும் மாணவருக்கும் இணக்கமான சூழலை உண்டாக்கியது” என்றும் தெரிவித்துள்ளார்.
source: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தொடர்புடைய பதிவுகள்:
இந்தியாவுடனான வணிகத்தை நிறுத்திய தாலிபான்கள் – எப்.ஐ.இ.ஒ அமைப்பு தகவல்
பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க வேண்டும் – தமிழ்நாடு அரசிடம் திருமாவளவன் கோரிக்கை
பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமான? – நிர்மலா சீதாராமன் கூறுவது சரியா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.