Aran Sei

சமூக ஊடகங்களுக்குக் காவல்துறை சான்று பெறாவிட்டால் வேலை கிடையாது – ஜம்மு காஷ்மீர் அரசு

புதிதாக வேலைக்குச் சேர தங்கள் சமூகஊடகங்களை காவல்துறை சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டுமென ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது எனத் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசு கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே சமூகவலைத்தளத்தில் இயங்கும் அதன் பணியாளர்களின் பட்டியலைக் கேட்டதாகவும்,  ஆனால் தற்போது முதல் முறையாகப் புதிதாகப் பணியில் சேருவதற்கே சமூக ஊடக கணக்குகளை காவல்துறை சரிபார்ப்புக்கு உட்படுத்தி சான்றிதழ் பெற வேண்டுமெனக் கூறியுள்ளது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் போராட்டதின் எதிரொலி: 4ஜி இன்டர்நெட் சேவைக்கு தடையை நீட்டித்த அரசு

ஜம்மு காஷ்மீர் பொதுத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அந்தச் சுற்றறிக்கையில், அரசின் நிர்வாகச் செயலர்கள், மண்டல ஆணையர்கள், இதர துறையின் தலைமைகள் தங்கள் கீழ் பணிபுரியும் அதிகாரிகளின் சமூக ஊடகக்கணக்குகளை ஜம்மு காஷ்மீர் புலனாய்வு துறையின் சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாகத் தி வயர்ரின் செய்தி கூறுகிறது.

இதன்படி சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்காத பணியாளர்களின் அடிப்படை தகவலைக் கேட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் : மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெஹ்பூபா முப்தி

மேலும், தற்போது முதன்முறையாகப் புதிதாகப் பணியில் சேருபவர்கள் மற்றும் முன்னரே பணியில் சேர்ந்து இருப்பவர்களாக இருந்தாலும் சமூக ஊடக கணக்குகளை காவல்துறையிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெறாத வரை சம்பளத்தை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாகத் தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக ஜம்மு காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்து 370 ஐ நீக்கியபிறகு, அங்குச் சமூக ஊடக தளங்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்