Aran Sei

காஷ்மீரில் அண்டை வீட்டாரின் இறுதி சடங்கை நடத்தியவர் ‘உபா’ சட்டதில் கைது – அவரின் வருகைக்கு காத்திருக்கும் குடும்பம்

ம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பிரிச்சோ பகுதியில், பயங்கரவாதி என்ற பெயரில் சுடப்பட்டு இறந்தவரின் நினைவுச் சடங்கை முன்னின்று நடத்திய ஹபீப் உல்லாஹ் வாணி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் 15 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் , ஐந்து குழந்தைகளும் உணவின்றியும், பயத்தோடும் அவரது வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.

வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

இதுகுறித்து தெரிவித்துள்ள அவரது மனைவி பிரவீணா அக்தர், “கடந்த ஏப்ரல் 4 அன்று வாணிக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. எதற்காக அவரைக் காவல்துறை அழைத்தது என்பது அவருக்குமே புரியவில்லை. இந்நிலையில், அவரைக் காவல்துறை கைது செய்தது. அதுகுறித்து அடுத்த நாள் காலைவரை எங்களிடம் தெரிவிக்கக்கூட இல்லை” என்று கூறியுள்ளார்.

வாணி கைது செய்யப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் ஜுனைட் அஹ்மத் என்பவர் புல்வாமா பகுதியில் ராணுவத்தோடு நடந்த துப்பாக்கி சூட்டில், பயங்கரவாதி என்ற பெயரில் கொல்லப்பட்டார், அவரோடு 3 பேர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தனத்திற்கு 62 ஏக்கர் நிலம் – 40 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கி அரசு உத்தரவு

இந்நிலையில் , கொரோனாவை காரணமாகக் கூறி ஜுனைட் அஹ்மத்தின் உடலை அவரது குடும்பத்திற்கு தர மறுத்து, காவல்துறையே எரியூட்டியுள்ளது. ஆனால், துப்பாக்கி சூட்டில் இறந்த பாதுகாப்புப் படையினரின் உடல் அவர்களது குடும்பத்திற்கு மறுக்கப்படுவதில்லை .

இதனையடுத்து ஜுனைட் அஹ்மத்தின் நினைவு மதசடங்கை ஹபீப் உல்லாஹ் வாணி முன்னின்று நடத்தியுள்ளார்.

ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்

இதைக் காரணமாக வைத்து  அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது.

SOURCE; Kaisar Andrabi, THE WIRE 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்