Aran Sei

தனியாருக்கு நிலமளிப்பதை ‘நில ஜிகாத்’ எனக் குற்றம்சாட்டிய பாஜக தலைவர்- சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் ஈடுப்பட்டிருந்தது ஆர்டிஐ மூலம் அம்பலம்

ம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ரோஷினி சட்டத்தின் கீழ் மாநில நிலங்களை தனியாருக்கு அளிப்பதை ‘நில ஜிகாத்’ எனக் கூறிய முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கவிந்தர் குப்தா, 2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரை சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வந்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

பால்வால் பகுதி வட்டாட்ச்சியரிடம் இருந்து வழக்கறிஞர் ஷேக் ஷகீல் பெற்ற தகவலின் படி கவிந்தர் குப்தா, சுபாஷ் சர்மா மற்றும் ஷிவ் ரத்தன் குப்தா ஆகியோர் 23 கனால், 9 மார்லா (1 கனால் = 1 ஏக்கர், மார்லா = 270 சதுர அடி) நிலத்தை பால்வால் தாலுகா கைங் கிராமத்தில் ஆக்கிரமித்தது தெரியவந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு வருவாய்த்துறை ஆவணங்களின் இவர்கள் பெயர்களில் இணைக்கப்பட்ட நிலையில், ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து பிப்ரவரி 9, 2017 ஆம் தேதி நீக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு நவம்பரில் மாவட்ட வளர்ச்சிக்குழு தேர்தலுக்கு முன்பாக, ஜம்மு & காஷ்மீர் அரசாங்கம், ரோஷினி சட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் அல்லது நிலங்களை அவர்கள் பெயருக்கு மாற்றியவர்கள் விவரங்களை வெளியிட்டதோடு அந்தச் சட்டத்தை நீக்கியது.

Source : The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்