Aran Sei

ஜம்மு காஷ்மீர்: பிரிவு 370 ரத்துக்கு எதிரான வழக்கு – தசரா பண்டிகைக்குப் பின் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தகவல்

ம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை தசாரா விடுமுறைக்குப் பின்னர் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவு மத்திய பாஜக அரசால் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலமே ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக கூறு போடப்பட்டன.

வாட்சப், ஜூம் செயலிகளுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு – ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகம் தகவல்

மேலும் ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய பாஜக அரசு தேர்தல் நடத்துவதில் தீவிரமாக இருந்து வருகிறது.

மதுரை: 95% கட்டிமுடித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணவில்லை – சு. வெங்கடேசன் கிண்டல்

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த 370-வது பிரிவு நீக்கம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் அமர்வு விசாரித்து வருகிறது.

kallaurichi sakthi school student case has led to adverse effect on students | Villavan Ramadoss

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்