Aran Sei

இஸ்லாமியர் அல்லாதவர்களும் பெண்பிள்ளைகளை இருபாலர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் – ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு கருத்து

சிறுமிகளுக்குத் தனி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என புதுடெல்லியைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய அமைப்பான ஜமியத் உலமா இ ஹிந்த் தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்மாமியர்கள் அல்லாதவர்களும் அவர்களது மகள்களை ’ஒழுக்ககேடான மற்றும் தவறான நடத்தையிலிருந்து’ விலக்கி வைக்க்க ‘இணைக்கல்வி வழங்குவதை’ தவிர்க்க வேண்டும் என கூறியது.

ஜாமியத் உலமா-இ-ஹிந்த் (மவுலானா அர்ஷாத் மதானி பிரிவு) செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அதன் தலைவர் அர்ஷாத் மதானி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடு முழுவதும் நடந்து வரும் மத மற்றும் சித்தாந்த மோதலை எந்த ஆயுதத்தாலும் தொழில்நுட்பத்தாலும் எதிர்க்க முடியாது. அதை எதிர்ப்பதற்கான ஒரே வழி புதிய தலைமுறை உயர்கல்வியுடன் தயார்படுத்துவது தான்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய அனைத்து அரசாங்கங்களும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட கொள்கையின் கீழ் கவ்லித் துறையில் இருந்து இஸ்லாமியர்களை விலக்கி வைத்ததாக அதில் குற்றம்சட்டப்பட்டிருந்தது.

”இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே கல்வியில் இருந்து விலக்கிக் கொள்ளவில்லை என்பது உண்மை, அவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை என்றால், அவர்கள் ஏன் மதராஸாக்களை நிறுவ வேண்டும்” என அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

”எந்த விலை கொடுத்தாவது, இஸ்லாமியர்கள் அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி கொடுத்து விட வேண்டும் என்று கூற விரும்புகிறேன். எங்கள் குழந்தைகள் குறிப்பாக மத அடையாளம் கொண்ட பெண்கள், எந்தவித தடையும் பாகுபாடுமின்றி உயர்கல்வி பெற உலகளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எங்களுக்குத் தேவை” என மதானி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்கள் செல்வந்தர்கள், அவர்களது பகுதியில் சிறுமிகளுக்குத் தனி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என மதானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எந்த மதமும் ஒழுக்கக்கேட்டையும் ஆபாசத்தையும் கற்பிப்பதில்லை என்றும், உலகின் அனைத்து மதங்களும் அவற்றைக் கண்டித்துள்ளன என மதானி குறிப்பிட்டுள்ளார்.

”எனவே இஸ்லாமியர் இல்லாத சகோதரர்கள், ஒழுக்ககேடான மற்றும் தவறான நடத்தையிலிருந்து அவர்களுது மகள்களை விலக்கி, இணைகல்வி வழங்குவதை தவிர்க்குமாறும், அவர்களுக்காக தனியான கல்வி நிறுவனங்களை அமைக்கவும் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் இந்த ஏழைக் குழந்தைகளுக்குக் கல்விக்கான சம வாய்ப்புகள் தேவைப்படும் நல்ல மதராஸாக்கள் மற்றும் நல்ல உயர் மதசார்பற்ற நிறுவனங்கள் தேவை என்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் அர்ஷாத் மதானி வலியுறுத்தியுள்ளார்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்