Aran Sei

வன்முறை தூண்டும் வகையில் பேசிய வழக்கு – ஜாமியா மிலியா துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவருக்கு பிணை வழங்கிய ஹரியானா நீதிமன்றம்

ரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையான, வகுப்புவாத கருத்துக்களை பேசிய வழக்கில், ஜாமியா மிலியா துப்பாக்கி சூட்டில் தொடர்புடையவருக்கு அம்மாநில நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் வெளியே போராடிய போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திய புகாரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக கடந்த மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒமர் அப்துல்லாவின் அனல் பறக்கும் பேச்சு – பதில் சொல்ல முடியாமல் திணறிய நவிகா குமார்

குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜூலை மாதம் பிணை மறுத்த நீதிபதி, கடுமையான வார்த்தைகளில் உத்தரவு பிறப்பித்திருந்தார். வன்முறை தூண்டும் வகையில் பேசுவது நாட்டில் புதிய கலாச்சாரம் ஆகிவிட்டது, வகுப்புவாத வன்முறையை ஆதரிப்பவர்கள், கொரோனா பாதிப்பைவிட நாட்டிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்துக் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, அவருக்குப் பிணை வழங்கியுள்ளார்.

ஜாமியா மிலியா துப்பாக்கிச்சூடு வழக்கில் பிணையில் வந்தபிறகு மூன்று முறை வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களை அவர் பேசியுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்