Aran Sei

கொரோனா காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது – ‘பீட்டா’ முதலமைச்சருக்கு கடிதம்

கொரோனா நோய் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக  ஜல்லிகட்டிற்கு  வழங்ப்பட்டுள்ள அனுமதியை திரும்பப்பெற வேண்டுமென்று 50 – க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். பீட்டா  (PETA) இந்தியாவும் இதுபோன்று முறையீட்டுள்ளது

நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திட வழிவகை செய்யும் விதமாக  தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்கள் கையெழுத்திட்ட கடிதத்தை முதலமைச்சருக்கும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ளனர். கொரோனா தொற்றுநோயால் பொது மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என்று மருத்துவர்கள்  இக்கடிதத்தில் எச்சரித்துள்ளனர்.  பீட்டா (People for the Ethical Treatment of Animals -PETA) இந்தியாவும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தும் முடிவை கைவிடுமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திரையரங்குகளில் 100% அனுமதி : தமிழக அரசின் ஆணையை எதிர்த்து – உயர் நீதிமன்றத்தில் மனு

அரசுக்கு மருத்துவர்கள் எழுதியுள்ள  கடிதத்தில்  ”கொரோனா பரவலைத் தடுப்பதற்கும்,பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதுடன் சுகாதாரப்பணியாளர்கள் மீதான பணி அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் போன்ற அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளை அனுமதிக்க்க்கூடாது” என்று கூறியுள்ளனர்.

”ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு  கொரோனா தொற்று இல்லை என்று வழங்கப்படும் பரிசோதனை சான்றிதழ் அவசியம் என்றும், பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வது அவசியம் போன்றவை ஜல்லிக்கட்டுக்கு அனுமதிப்பதற்கான முன் நிபந்தனைகளாக கூறப்பட்டுள்ளன. எனினும் வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வைரஸ் தொற்று உடலில் அடைகாக்கப்படும் காலகட்டத்தில், மிக முன்னதாக ஒருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், பரிசோதனை முடிவுகள் தவறாக கிடைக்கப் பெறலாம். மேலும்  நோய் தொற்றுக்கு உள்ளாகும் அனனவருக்கும் காய்ச்சல் ஏற்படுவதில்லை” என்றும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மாஸ்டர்’ படம் வெளியாகுமா? – திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் சிக்கல்

“கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு ஜல்லிக்கட்டை சட்டப்பூர்வமாக்கியதில் இருந்து, இதுவரை குறைந்தது 22காளைகள் மற்றும் 57 மனிதர்கள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது, மேலும் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் 3,632 மனிதர்கள் காயமடைந்ததுள்ளனர்.  இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்டால் கொரோரா தொற்றின் காரணமாக மனித இறப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும்” என்று இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து : பாஜகவின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு – சு.வெங்கடேசன்

“இந்த ஆண்டுக்கான போட்டி நிகழ்வுகள் நிறுத்தப்படாவிட்டால் ஜல்லிக்கட்டின் காரணமொக மட்டுமின்றி, கொரானா கரணமாகவும் அதிகமான மக்கள் இறப்பார்கள் என்று அச்சம் கொள்ளப்படுகிறது. காளைகனைத் துன்புறுத்துவதற்கு பெரும் கூட்டம் கூடினால், சமூகமும் துன்புறுத்தப்படும்” என்று  எச்சரிக்கிறார் பீட்டா  இந்தியாவின் இணை ஆராச்சியாளர் அங்கிதொ பாண்டே.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்