Aran Sei

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 43 விழுக்காடு கிராமப் புற வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்புகள் – 7 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 விழுக்காட்டிற்கு கீழ் உள்ளதாக தகவல்

ல்ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை 43 விழுக்காடு கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் ஜல்சக்தித் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அதிகாரிப்பூர்வ தகவலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஆறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 விழுக்காடு வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அசாம் (22%), ராஜஸ்தான் (20.89%), லடாக் (16.32%), ஜார்கண்ட் (15.12%), மேற்கு வங்கம் (13.48%), சத்தீஸ்கர் (13.17%), உத்திரபிரதேசம் ஆகிய  ஏழு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 விழுக்காடுக்கு குறைவான வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்பு இருப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 19,22,49,480 வீடுகளில் 8,31,03,880 வீடுகளுக்கு, சுமார் 43.23 விழுக்காடு இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், 5,07,41,042 (26.39%) வீடுகளுக்கு 2019 ஆம் ஆண்டு ஜல்சக்தி மிஷன் தொடங்கப்பட்டதில் பிறகு இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவா, தெலுங்கான, அந்தமான் நிகோபர் தீவுகள், புதுச்சேரி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன், ஹரியானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 விழுக்காடு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்