Aran Sei

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்

மேற்குவங்க மாநிலத்தில் லவ் ஜிகாதையும் , பசுக்கள் கடத்தப்படுவதையும் மட்டுமே வாக்குவங்கி அரசியலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் அரசு செய்து கொண்டிருப்பதாக நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தின் மால்டா நகரில் நடந்த பாஜகவின் பரிவர்த்தன் (மாற்றம்) யாத்திரைக்குப் பின்னான பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு பேசினார் என்று தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

“உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத் திருமணங்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ளது” என்றும், “ஆனால் மேற்குவங்கத்தில் போலியான, நயவஞ்சகமான லவ் ஜிகாத் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றும் “இந்த திரிணாமுல் அரசு வாக்குவங்கி அரசியலுக்காக லவ் ஜிகாதையும், சட்டவிரோதமாக பசுக்களைக் கடத்துவதையும் குறிப்பிட்டவர்களை திருப்திப்படுத்த செய்து கொண்டிருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

இது போன்ற ஆபத்தான சம்பவங்கள் எதிர்காலத்தில் தீவிரமான விளைவுகளை உண்டாக்குமெனவும் , மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் சட்டவிரோதமாக செயல்படும் பசுவதை கூடங்கள் மூடப்படும் பசு கடத்துதல் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அவர் உரையாற்றியுள்ளதாக தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, அடுத்த மாதம் 8 கட்டங்களாக நடைபெறவுள்ள மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யாநாத்தின் முதல் பிரச்சாரப் பயணமாகும். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மால்டாவின் கசோல் பகுதியில் இந்த பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இது குறிப்பாக அந்த பகுதியில் உள்ள இந்துக்களின் வாக்குகளை கவருவதற்காக பேசப்பட்ட உரை என அரசியல் பார்வையாளர்கள் கருதுவதாக தி இந்து கூறியுள்ளது

உத்தரப்பிரதேசம் : திருமணத்திற்காக மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

மேலும், யோகி ஆதித்யநாத் தனது உரையில் துர்கா பூஜைகளுக்கு அரசால் அனுமதி மறுக்கப்படுவதாகவும், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட தடைவிதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். திரிணாமூல் அரசு  தொடர்ந்து ராம பக்தர்களை அவமதித்து வருவதாகவும் அதுமட்டுமல்லாது அராஜகத்தை மேற்கொள்வதாகவும் குறிப்பாக நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்ட போது அரசே அதற்கு எதிராக போரட்டங்களை நடத்தியதென்றும் பல குற்றச்சாட்டுகளை தனது அரைமணி நேர உரையில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்திருக்கும் என்று கூறிய அவர் ரிணாமுல் காங்கிரஸ் அரசின் சட்டம் ஒழுங்கு குறித்தும் பெண் பாதுகாப்பு குறித்தும் குற்றச்சாட்டுகளை அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார் என்று தி இந்து செய்தி கூறுகிறது.

மேற்கு வங்க தேர்தலில் “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு

ஆதித்ய நாத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகுளி கோஷ் தஸ்திதர் , “மேற்குவங்க மக்கள் யாருக்கும் இந்த உபதேசம் தேவை இல்லை , பெண்களுக்கு எதிரான அதிகமான குற்றங்கள் நடக்க கூடிய மாநிலத்தின் முதல்வர் இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

“உத்தர பிரதேசம் ஹத்ராஸில் தனது மகளிற்கு நடந்த பாலியல் சீண்டலுக்கு எதிராக புகார் தெரிவித்த தந்தை கொல்லப்பட்டிருகிறார், இதோ இன்னுமொரு ஹத்ராஸ் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாஜக ஆளும் உபியில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, இது மேற்கு வங்கம்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்