Aran Sei

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ‘உண்மை அமைதி தரும்; பொய் பரப்புரை வன்முறை தரும்’ -ஜெய்ராம் ரமேஷ்

ண்மையில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்பைத் தூண்டுகிறது என்றும் வரலாற்றைத் திரித்து வன்முறையை ஊக்குவிக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், கோவா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த திரைப்படத்துக்கு கேளிக்கை வரி இல்லை என அறிவித்திருக்கின்றன.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் நாடு  முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், இத்திரைப்படம் குறித்து, இன்று (மார்ச் 19), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், சில திரைப்படங்கள் மாற்றத்தைத் தூண்டும் வகையில் இருக்கும். ஆனால், தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்பை தூண்டும் வகையில் இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“உண்மை என்பது நீதி, மறுவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு வழிவகுக்கும். ஆனால், இந்த பரப்புரையானது உண்மைகளை திரிக்கிறது. வரலாற்றைத் திரித்து, கோபத்தைத் தூண்டி, வன்முறையை ஊக்குவிக்கிறது” என்று அவர் விமர்சித்துள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் வழியே பிரிவினையைத் தூண்டும் பாஜக – மெகபூபா முப்தி விமர்சனம்

அரசியல்வாதிகள் காயங்களைக் குணப்படுத்துகிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்பவர்கள் மக்களின் பயத்தையும் தவறான எண்ணத்தையும் பயன்படுத்தி, அவர்களைப் பிரித்தாளுகிறார்கள் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்