Aran Sei

‘புத்ததேவ் விடுதலையை விரும்புபவர்; மற்றவரைப்போல அடிமையல்ல’- குலாம் நபி ஆசாத்தை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்

ன்றிய அரசு அறிவித்துள்ள பத்ம பூஷண் விருதை நிராகரித்துள்ள மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைப் பாராட்டியுள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், பத்ம பூஷண் விருது பெறவுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை விமர்சித்துள்ளார்.

நேற்று(ஜனவரி 25), இந்தாண்டிற்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்தது. கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கும் பத்ம பூசண் விருது அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, விருதை நிராகரிப்பதாக புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

‘பத்ம பூஷன் விருதை ஏற்க போவதில்லை’- புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவிப்பு

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் குலாம் நபி ஆசாத்தை ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

“(புத்ததேவ் பட்டாச்சார்யா) சரியான காரியத்தை செய்துள்ளார். அவர் விடுதலை (ஆசாத்) விரும்புகிறவர் மாற்றவரைப் போல் அடிமையல்ல (குலாம்)” என்று தெரிவித்துள்ளார்.

இந்தி மொழியில் குலாம் என்றால் அடிமை என்று பொருள். ஆசாத் என்றால் விடுதலை என்று பொருள்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்