Aran Sei

‘பிணை உத்தரவைப் பெற பழங்காலம் போல் புறாக்களை நம்பியிருக்கிறதா சிறை நிர்வாகம்?’ – உச்சநீதிமன்றம் கேள்வி

ணையவசதி கொண்ட நவீன காலத்திலும்  சிறைச்சாலை நிர்வாகங்கள் பிணை உத்தரவைப் பெற பண்டையக்காலம் போல புறாக்களையே நம்பியிருக்கிறதா என  உச்சநீதிமன்றம் கேள்வி  எழுப்பியுள்ளதாக  என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலைகளில் இணையவசதி இல்லாதது குறித்து மாநில அரசு மதிப்பீடு செய்யவேண்டுமெனவும் , எப்போது கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படும் வகையில்  அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும் என்றும்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு  உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

அதுமட்டுமல்லாது, யாருக்கு பிணை வழங்கப்பட்டதோ அவர்களை  விடுவிக்கும் வகையில், குறிப்பிட்டக் காலத்திற்குள்  பிணை உத்தரவு சிறைத்துறைக்கு சென்று சேர வேண்டுமெனவும் உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளதாக  என்.டி.டி.வி செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்டும் கைதிகளைச் சிறைத்துறை நிர்வாகம்  காலம் தாழ்த்தி  விடுவிப்பது குறித்து உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துகொண்டது கவனிக்கத்தக்கது.

குழந்தைகளுக்கான தடுப்பு மருந்தை முழுதும் பரிசோதனை செய்யுங்கள்- ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கில் பதிலளித்த ஒன்றிய அரசின் வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்திற்கும், சிறைத்துறைக்கும் நேரடி இருக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்