நடிகர் சூரியா நடித்து, ஞானவேல் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் இந்தியில் பேசும் அடக்குக்கடைக்காரை தமிழில் பேசச் சொல்லி காவல்துறை அதிகாரி பெருமாள்சாமி (பிரகாஷ் ராஜ்) அறையும் காட்சி தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினை அடிப்படையாகக் கொண்டே ‘ஜெய் பீம்’ படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜெய்பீம்: வதையுறும் வாழ்வும் நீதிக்கான பயணமும் – தமிழ்ப்பிரபா
இப்படத்தில், திருட்டு நகைகளை வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரி பெருமாள்சாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜிடம் அடகுக்கடைக்காரர் இந்தியில் பேசுவார். உடனே அவரைக் கன்னத்தில் அறையும் பிரகாஷ் ராஜ் ‘தமிழில் பேசு’ என்பார்.
இந்தக் காட்சி இந்தியை தாய் மொழியாய் கொண்டவர்களை புன்படுததும் வகையில் இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து நியூஸ் 9 லைவ் என்ற ஊடகத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், ”’ஜெய் பீம்’ படத்தில் கன்னத்தில் அறையும் காட்சி தொடர்பான சர்ச்சை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்கிற கேள்விக்கு, பதில் அளித்துள்ள பிரகாஷ் ராஜ் “ஜெய் பீம் போன்ற படத்தைப் பார்த்துவிட்டு, பழங்குடியினரின் வலியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் அவர்கள் கண்ணுக்கு தெரியாமல், இந்தி பேசியவரின் கன்னத்தில் அறைந்தது மட்டுமே கண்ணுக்கு தெரிந்தால் அவர்களின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது” தெரிகிறது என்று கூறியுள்ளார்.
அந்த குறிப்பிட்ட காட்சியை விளக்கியுள்ள பிரகாஷ் ராஜ் “தென் இந்தியர்களுக்கு இந்தி தங்கள் மீது திணிக்கப்படுகிறது என்ற கோபம் இருக்கும்பட்சத்தில், விசாரிக்கப்படும் நபர், தமிழ் தெரிந்துகொண்டே இந்தியில் பேசும்போது, அவரை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி வேறு எப்படி நடந்துகொள்வார்?” என்று கூறியுள்ள பிரகாஷ் ராஜ் “இதுவே என்னுடைய கருத்தும் என்பதால், நான் அதில் உறுதியாக உள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.
“அந்த காட்சியில் நடித்திருப்பது பிரகாஷ் ராஜ் என்பதாலேயே அவர்களுக்கு இது உறுத்துகிறது. அவர்களின் உள்நோக்கம் வெளிப்பட்டதால், அவர்கள் அம்பலப்பட்டுள்ளனர். பழங்குடி மக்களின் வலி அவர்களுக்கு உறுத்தவில்லை என்றால், நான் சொல்ல விரும்புவதெல்லாம், உனக்கு அவ்ளோதான் புரிஞ்சுதாடா? நீதான அவன்?. வெறுப்பை கொட்டும் இதுபோன்ற நபர்களுக்க விளக்கம் அளிப்பதில் பயனில்லை” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.