Aran Sei

‘இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்காவிடில் ஜலசாமாதி அடைவது உறுதி’ – சாமியார் பரமஹான்ஸ் ஆச்சார்யா

ந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்கக் கோரி, இந்து சனாதன் தர்மம் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், அதில் 29 மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் இந்து ராஷ்டிரமாக பற்றிய விவாதித்ததாகவும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஜகத்குரு பரமஹான்ஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்திற்கு பின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள அவர், “இன்று நடைபெற்ற ‘இந்து சனாதன் தர்மம்’ கூட்டத்தில், 29 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ‘இந்து ராஷ்டிரமாக’ குறித்து விவாதிக்க ஒன்று கூடினர். நான் ‘ஜல சமாதி’ அடைந்தவுடன், என்னை பின்பற்றுபவர்கள் தொடர்ந்து என் குரலாக ஒலிப்பார்கள். இந்தியா ‘இந்து ராஷ்டிரமாக ‘ என்று அறிவிக்கப்படும் வரை அவர்கள் தங்கள் கோரிக்கையையும் போராட்டத்தையும் தொடருவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எனது கோரிக்கைகளை அரசு புறக்கணித்தால், நான் ‘ஜல சமாதி’ எடுப்பது உறுதி. ஆரம்பத்தில்தான் நான் தனியாளாக இருந்தேன். இப்போது, 50 கோடி மக்களுக்கு மேல் என்னுடைய ராஷ்டிர பிரேமை’-க்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.” என்று ஜகத்குரு பரமஹான்ஸ் ஆச்சார்யா கூறியுள்ளார்.

’அக்டோபர் 2க்குள் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைவேன்’ – ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ்

உத்தபிரதேசத்தில் ஜீயர்களில் ஒருவரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ். இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாத அண்மையில் கூறியிருந்தார்.

அப்போது, இது தொடர்பாக, அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “வரும் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

ஏற்கெனவே, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை மேற்கொண்டிருந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்