Aran Sei

கொரோனா நிவாரணம் வழங்கிய காங்கிரஸ் தலைவரை விசாரிக்கும் காவல்துறை : பிரதமரின் கோழைத்தனமென காங்கிரஸ் கண்டனம்

credits : times of india

ன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையின் குற்றவியல் பிரிவு, கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும், இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் பி.வி.ஸ்ரீநிவாசை விசாரித்து வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம், 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,46,809 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் 2,62,317 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 4000 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 2,00,79,599 பேர் நோயிலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், கொரோனா மருந்துகளை சட்டவிரோதமாக வழங்கி வருவதாக இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் ஸ்ரீநிவாசை டெல்லி காவல்துறையின் குற்றவியல் பிரிவு விசாரித்து வருகிறது.

தடுப்பூசி பற்றாக்குறை: ”நாங்கள் தூக்கிட்டு கொள்ள வேண்டுமா?” – கடுப்பான அமைச்சர்

கொரோனா மருந்துகளை சட்டவிரோதமாக வழங்கி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையிலேயே ஸ்ரீநிவாஸ் விசாரிக்கப்பட்டு வருவதாக டெல்லி காவல்துறையின் செய்தி தொடர்பாளர் சின்மாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

கங்கையில் மிதக்கும் சடலங்கள் : ஒன்றிய அரசுக்கும், உ.பி, பீகாருக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “இது பிரதமர் நரேந்திர மோடியின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. நீங்கள் ஸ்ரீநிவாசை ஏன் தடுக்க முயல்கிறீர்கள் என்பதை இந்தியாவே அறியும், ஸ்ரீநிவாசைப் போல் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உங்களின் பிம்பத்தை மேலும் மேலும் சுக்குநூறாக உடைக்கிறார்கள். அவர்கள் உங்களால் செய்ய முடியாததை செய்கிறார்கள். காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.” என்று டிவிட் செய்துள்ளது.

‘புலம்பெயர் தொழிலாளர்களிடம் அடையாள அட்டை கேட்பதை விடுத்து, அவர்களுக்கு உணவு அளியுங்கள்’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேலும்,. “தன்னலமற்ற முறையில் நம் மாபெரும் தேசத்தின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வது குற்றமா? பாஜக ஒருபோதும் பெற்றிடாத ஒரு பாரம்பரியத்தை புரிந்து கொள்ளும் என்பதை நாம் எவ்வாறு எதிர்பார்க்கலாம்?” என்று காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் கேள்வியெழுப்பியது.

‘கொரோனா கிருமி ஒரு உயிர்; நம்மை போன்று அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு’ – உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் கருத்து

மேலும், மோடி – அமித்ஷா கூட்டணி எப்போதும் நடந்து கொள்வது போல, இதிலும் நடந்து கொண்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது உதவி செய்ய மாட்டார்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் உதவி செய்ய விட மாட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்