Aran Sei

கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகு விமர்சிப்பது அழகல்ல – தேமுதிகவிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

திமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியுள் நிலையில், அதிமுகவை விமர்சனம் செய்வது அழகல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பழனிசாமி, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேமுதிகவை குறிப்பிட்டு பேசிய அவர், உடன்பாடு ஏற்படவில்லை என்றால், தனியாக தேர்தலை சந்திப்பது தவறில்லை. ஆனால், ஒரு கட்சியின் மீது பழி சுமத்துவது தவறு என்று கூறினார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்று வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு பதில்  அளித்த முதலமைச்சர், “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தகுதி உள்ளது, வாக்கு வங்கி என்று உள்ளது. அதன் அடிப்படையில்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என்று கூறினார்.

திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெரும் என்று வெளியாகியுள்ள தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், ஊடகங்கள் அவர்கள் விரும்பிய வகையில் செய்தி வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அதிமுக தோல்வியடையும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததாகவும், ஆனால், அதிமுக அந்த தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையும் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்டதற்கு, அதை முழுமையாக படித்துவிட்டு கருத்து கூறுவதாக எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்