Aran Sei

வனிகர்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் ஒன்றிய அரசின் மற்றுமொரு புரளி – ராகுல் காந்தி விமர்சனம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் திட்டங்கள் தொகுப்பு அல்ல; புரளி என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “நிதியமைச்சர் அறிவித்திருக்கும் ‘பொருளதார தொகுப்பை’ எந்த குடும்பமும் தங்கள் வாழ்க்கை, உணவு, மருத்துவம் அல்லது குழந்தைகளின் பள்ளி கட்டணங்களுக்காக செலவிட முடியாது. அது ஒரு தொகுப்பு அல்ல; மற்றொரு புரளி” என தெரிவித்துள்ளார்.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவுகளில், “சில அடிப்படை உண்மைகள் ; கடன் உத்திரவாதம் கடன் அல்ல. கடன் கூடுதல் சுமை. கடன் சுமையில் இருக்கும் எந்த வணிகருக்கும் வங்கியாளர்கள் கடன் தரமாட்டார்கள்” என கூறியுள்ளார்.

மேலும், ”கடன் சுமை அல்லது பணப் பற்றாக்குறையில் இருக்கும் வணிகர்கள் அதிக கடனை விரும்பவில்லை, அவர்களின் தேவை கடன் இல்லாத மூலதனம். அதிக கடன் வழங்கல் என்பது அதிக தேவை (நுகர்வு) என்று அர்த்தமல்ல. மாறாக, அதிக தேவை (நுகர்வு) அதிக விநியோகத்தை தூண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

கட்டாயமதமாற்றம் செய்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கிய அமைப்புகள் – சுயவிருப்பப்படி மதம்மாறியதாகப் பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்த பெண்

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு ரூ 1.5 லட்சம் கோடி கூடுதல் கடன், சுகாதாரத்துறைக்கான நிதி, சுற்றுலா பயணிகளுக்குக் கூடுதல் கடன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி மற்றும் சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஆகியவற்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்