Aran Sei

‘உத்தர பிரதேசத்தில் மனிதனாக இருப்பதை விட மாடாக இருப்பதே மேல்’ – சஷி தரூர்

credits : PTI

த்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மனிதர்களைவிட மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின சஷி தரூர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் நேற்றைய தினம், 4,12,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2,10,77,410  ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,30,168 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,980  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மாடுகளைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் உதவி மையங்களும், மாட்டுத்தொழுவங்களில் கொரோனா நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றவேண்டுமென அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

கொரோனாவால் உயிரிழந்த பாஜக எம்.எல்.ஏக்கள் – யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் என விமர்சிக்கும் பாஜக தலைவர்கள்

மாட்டு தொழுவங்களில் மாடுகளுக்கு ஆக்ஸிமீட்டர் மற்றும் உடல்வெப்ப சோதனை கருவி போன்ற அனைத்து மருத்துவ கருவிகளும் பொருத்தப்படும் என்றும்,  மாட்டு தொழுவங்களை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அம்மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் – யோகி ஆதித்யநாத்திற்கு பினரயி விஜயன் கடிதம்

அரசின் புள்ளிவிவரப்படி, தற்போது 5,268 பசுப்பாதுகாப்பு மையங்களில் 5,73,417 மாடுகள் பாதுகாக்கப்படுவதாகவும், மேலும், 4,64,311 மாடுகள் 4,529 தற்காலிக பசுப்பாதுகாப்பு மையங்களில் உள்ளதாகவும் த்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஷி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொரோனோ நோய்த்தொற்று பரவல் கடுமையாக அதிகரித்து வரும் சூழலில், பசுவுக்கு உதவும் மையங்களை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவாக்கி வருகிறார். உத்தர பிரதேசத்தில் மனிதனாக இருப்பதற்கு பதில் மாடாக இருப்பதே மேல்” என்று பதிவிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்