Aran Sei

‘தேசபக்தியே ஒரு இந்துவின் அடிப்படை தன்மை’ – ஆர்எஸ்எஸ் தலைவர்

Image Credits: India TV

தேசபக்தியுடன் இருப்பது ஒரு இந்துவின் இயல்பு என்றும் அது இந்துக்களின் அடிப்படை தன்மை என்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு தாய்நாடு மீதான அன்பு, ஆன்மீகம் மற்றும் மத நம்பிக்கைகளிலிருந்து வந்துள்ளது என்றும் இதை பற்றி மகாத்மா காந்தி கூட எழுதியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ்-ம் அம்பேத்கரும் – என்றுமே இருந்திராத தோழமை

ஜே.கே.பஜாஜ் மற்றும் எம்.டி.ஸ்ரீனிவாஸ் எழுதியுள்ள, “மேக்கிங் ஆஃப் எ ஹின்டு பேட்ரியாட்: பக்ககிரௌண்ட் ஆஃப் காந்திஜி’ஸ் ஹிந்த் ஸ்வராஜ்” (Making of a Hindu Patriot: Background of Gandhiji’s Hind Swaraj) புத்தகத்தை வெளியிடும் நிகழ்வில் மோகன் பகவத் பேசியுள்ளார்.

அப்போது, இந்தப் புத்தகத்தைக் காந்தி பற்றிய உண்மையான அறிவார்ந்த ஆராய்ச்சி ஆவணமாக வரையறுக்கும் மோகன் பகவத், காந்தி அவரது தர்மத்தையும் தேசபக்தியையும் வேறுபடுத்தவில்லை என்றும் அவரது தாய்நாட்டின் மீதான அன்பு அவரது ஆன்மீகத்திலிருந்து தோன்றியது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்-ன் யுபிஎஸ்சி ‘யாகம்’ – சீ.நவநீத கண்ணன்

“காந்தி தனது தேசபக்தி அவரது தர்மத்திலிருந்து உருவாகிறது என்று கூறினார்” என்று தெரிவித்த மோகன் பகவத் தர்மம் என்பது மதத்தைச் சார்ந்தது மட்டுமல்ல அது அதனை கடந்த ஒன்றாகும் என்றும் கூறியுள்ளார்.

சங்பரிவாரின் வேலைகள் பெருமைக்காக அல்ல, பிரிவினைக்காக – ராமச்சந்திர குஹா

“ஒருவர் இந்துவாக இருந்தால் அவர் தேசபக்தராக இருக்க வேண்டும், அதுவே ஒரு இந்துவின் அடிப்படை தன்மை மற்றும் இயல்பு. சில நேரங்களில் நீங்கள் அவர்களது தேசபக்தியை எழுப்ப வேண்டியிருக்கும், ஆனால் அவர்கள் ஒருபோதும் தேசவிரோதியாக இருக்க முடியாது. ஆனால், தேசபக்தி என்பது நிலத்தின் மீதான அன்பு மட்டுமல்ல, ஒருவர் தனது நாட்டை நேசிக்கிறார் என்றால், அதன் மக்கள், நதி, கலாச்சாரம், மரபுகள் மற்றும் எல்லாவற்றையும் குறிக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்” என்றும்  ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்