Aran Sei

டைனிக் பாஸ்கர் பத்திரிகை நிறுவனத்தில் வருமானவரி சோதனை – பாஜக அரசை விமர்சித்ததால் வந்த விளைவா?

நாட்டின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான டைனிக் பாஸ்கர் குழுமத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை இச்சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இன்று (ஜூலை 22), காலை 7 மணி முதல்,  மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், குஜராத்தின் அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு சில இடங்களில் உள்ள டைனிக் பாஸ்கர் குழுமத்துக்கு சொந்தமான 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியா 142 வது இடம் – இந்துத்துவவாதிகளால் கேள்விக்குறியாகும் கருத்துரிமை என ஆய்வில் தகவல்

இந்தி மொழியில் அதிகம் விற்பனைக்குள்ளாகும் நாளிதழிலான டைனிக் பாஸ்கர் தனது இணையதளத்தில், “கொரோனா தொற்று காலத்தில் கங்கை நதியில் மிதக்கும் சடலங்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதால், டைனிக் பாஸ்கர் குழு மீது அரசு இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருகிறது. எங்கள் அலுவலகங்கள் மட்டுமின்றி, குழுமத்தின் முக்கிய நபர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சோதனை அதிகாரிகள் எங்கள் ஊழியர்களின் அலைப்பேசிகளை கைப்பற்றியுள்ளனர். ஒரு பெண்  வருமானவரித்துறை அதிகாரி கூட இச்சோதனைகளில் இடம் பெறவில்லை.” என்று தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தைத் தலைமையிடமாகக் கொண்ட டைனிக் பாஸ்கர் குழுமம், நாட்டின் மிகப்பெரிய ஊடகக் குழுமங்களில் ஒன்றாகும். பல மொழிகளில் 60 க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியாகி வருகிறது.

சடலங்களை சுமக்கும் கங்கை என ஒன்றிய அரசை விமர்சிக்கும் குஜராத்திய கவிதை – இலக்கிய நக்சல்கள் என குற்றஞ்சாட்டிய சாகித்திய அகாதமி தலைவர்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் செய்தி தொலைகாட்சியான பாரத் சமாச்சரின் வளாகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இச்செய்தி நிறுவனம் கொரோனா  நோய்தொற்றை மாநில அரசு கையாளுவதை மிகவும் விமர்சித்து வந்தது. அலுவலகங்கள் மட்டுமின்றி, அதன் ஆசிரியர் பிரஜேஷ் மிஸ்ராவின் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.

source; thehindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்