Aran Sei

டாப்சி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை – பேராட்டங்களை ஆதரித்தது காரணமா?

ரி ஏய்ப்பு செய்ததாக, பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு, இயக்குநர் அனுராக் கஷ்யப் ஆகியோர் இல்லங்களில் வருமான வரி சோதனை மேற்க்கொண்டு வருதவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

அனுராக் கஷ்யப்பின் பாண்டம் பிலிம்ஸ், தயாரிப்பாளர் மது மாந்தேனா ஆகியோர் அலுவலகங்கள் உள்ளிட்ட மும்பை மற்றும் புனேவில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெறுகிறது எனத் தகவல்கள் தெரிவிப்பபதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி மதுபான சாவுகள் – தயாரித்தவருக்கு மரணதண்டனை – பஞ்சாப் கலால் சட்ட திருத்தம்

டாப்ஸி பன்னு மற்றும் அனுராக் கஷ்யப் பல்வேறு பிரச்னைகளில் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து வந்த நிலையில், இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹன்னா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களின் கருத்திற்கு எதிராக இந்திய பிரபலங்கள் கூட்டாக கருத்து தெரிவித்திருந்ததை டாப்சி விமர்சித்திருந்தார்.

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த டாப்சி பன்னு, “ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையையும் அல்லது ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையையும் ஆட்டம் காணச் செய்கிறதென்றால்,  நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியர்’ ஆகக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதே போல இயக்குனர் அனுராக் கஷ்யப், 2019 ஆம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியாக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை, சுசாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தியின் கைது ஆகிய நிகழ்வுகளின்போது, கருத்து தெரிவித்திருந்ததோடு, இது தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் போதுமான அளவு குரல் எழுப்பவில்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்