Aran Sei

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வணிக மற்றும் பத்திரப்பதிவு துறை முன்னாள் அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 16) காலை முதல், அவருக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.சி.வீரமணி மற்றும் அவரின் உறவினர்களுக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அருகே இடையம்பட்டியில் உள்ள கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம், வீடு, திருப்பத்தூரில் அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள அவருக்கு சொந்தமான ஹில்ஸ் ஓட்டலில், ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இக்குழுவானது, இன்று (செப்டம்பர் 16) காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக ஓட்டல் முன்பு 20 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்