Aran Sei

நெருங்கும் தேர்தல் – ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை

திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இன்று (ஏப்ரல் 2) காலை, சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும், தாராபுரத்தில் கூட்டணி கட்சியான மதிமுகவின் மாவட்ட துணை செயலாளர் கவின் ராஜ் மற்றும் திமுக நகர செயலாளர் கே.எஸ்.தனசேகரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தது.

திமுக, மதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை – பாஜக தலைவர் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் பரபரப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையினரின் இந்த சோதனை நடைபெறுகிறது.

அரசியல் உள்நோக்கத்துடனேயே இந்த வருமானவரி சோதனையானது திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் நடைபெறுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “பழிவாங்கல். திமுக தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை. இது பாஜக கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு. திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு.” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், இத்தகைய அரசியல்ரீதியான அச்சுறுத்தல்களை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர் என்றும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்