Aran Sei

பெகசிஸ் ஸ்பைவேர்: தேச பாதுகப்பில் நிகழ்ந்த வன்முறை

ன்னாட்டு பத்திரிக்கையாளர்களின் ஆய்வின் வழியாக இஸ்ரேலிய  பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக குறிப்பிட்ட தொலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதில் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சியினர், சிவில் சமூகத்தினர், பத்திரிகையாளர்கள்(தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் மூன்று ஆசிரியர்கள்- இரண்டு தற்போதைய மற்றும் ஒரு முன்னாள் ஆசிரியர்) ஆகிய தனிப்பட்ட நபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு இதுகுறித்து விசாரிக்க நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், இஸ்ரேலிய நிறுவனம் ஸ்பைவேரை  “சரிபார்க்கப்பட்ட அரசாங்களுக்கே” விற்பட்டுள்ளது என்று கூறியுள்ள நிலையில், அரசாங்கம் இதைத் தட்டிக்கழிப்பதற்கோ, சதிமோசடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறுவதற்கோ வாய்ப்பில்லை.

பெகசிஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்ட உலகத் தலைவர்கள் – 14 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் வெளியானது

தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில் ”வெளியாகி உள்ள இந்தப் பட்டியல் இந்திய மக்களாட்சிக்கு அவதூறு விளைவிக்கும் செயல்; இது நன்கு கட்டமைக்கப்பட்ட நிறுவனம்” என்று தெரிவித்தார்.

இதே போன்று அமித் ஷாவும், சீர்குலைப்பவர்களும் தடுப்பவர்களும் முந்தைய காலத்திலிருந்தே  குழப்பமான சூத்திரத்தைத் தற்போது  மறுசுழற்சி செய்துள்ளனர். ஆனாலும்,அமித் ஷா யாரையும் நோக்கிச் சுட்டிக்காட்டவில்லை. அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வும் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக சட்டப்பூர்வமாக மின்னணு தொடர்புத்துறையில் மேற்கொள்ளப்படும் குறுக்கீடுகள் நிறுவப்பட்ட நடைமுறைகள் மற்றும் நெறிமுறை அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

செயல்பாட்டாளர்கள் முதல் ஜேஎன்யூ மாணவர்கள்வரை – பெகசஸால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியல்

மேலும், எல்லா தொலைபேசிகளும் ஹேக் செய்யப்படவில்லை என்றும் கூறினார். ஆயினும்கூட, அவரும் அவரது அரசாங்கமும் இப்போது பரபரப்பாக உள்ள  பெகாசிஸை குறித்து  உரையாற்ற வேண்டும். அரசியல் எதிரிகள், எதிர்ப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை குறிவைக்க அரசாங்கமோ அல்லது அதன் நிறுவனங்களோ வரம்பு மீறலாம்  என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது.

பெகசிஸ் ஸ்பைவேர் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தது யார்? சொல்லுங்கள் மோடி? – சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

இது தனிநபர்களின் தனியுரிமைக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கியுள்ள  உரிமை. மேலும், அதை விட அதிகமாக வழங்கப்பட்டுள்ள உரிமையைப் பற்றியது. இந்த பெகசிஸ் பிரச்சனை என்பது அரசு நிறுவனங்களின் நேர்மையின் மீது நிழல் படிய செய்துள்ளது. முன்னாள் அரசாங்கங்கள் மீதும் கூட இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசியல் எதிரிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டின் தன்மை வேறானதாகும் . ஏனென்றால், இரண்டின் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அதன் பின்புலமாக உள்ள அரசியல் சூழல் ஆகியனவாகும். ஆனால் உச்சபட்ச அளவிலான தொழிற்நுட்பத்தினால் முன்போதும் இல்லாத அளவுக்கு உளவு பார்த்தல் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணின் தொலைபேசி கண்காணிக்கப்பட்டுள்ளது.பின்னர் உச்சநீதிமன்றக் குழுவால் அவர் மீதான விசாரணை முடித்து வைக்கபட்ட நிலையில்,பாஜகவினால் ராஜ்ய சபா உறுப்பினராக முன்மொழியப்பட்டார். உச்சநீதிமன்றம் இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.  ஆனாலும், ஏன் இந்த விவகாரத்திற்கு அதிக  முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு  இதுமட்டுமே ஒரே காரணமில்லை.

சட்டவிரோதமாக ஒருவரின் தகவல்களைத்  திருட முயற்சிப்பது இந்திய ஜனநாயகத்தை கெடுக்கும். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில்  , மோசமான  தந்திரங்களைக் கொண்டுள்ள  துறை சுத்தமாக மாற  வேண்டும்.

 தி இந்திய எக்ஸ்பிரஸின் தலையங்கம்

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்